வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!
கஸ்தூரி மஞ்சள் உமையாளின் கைபட்டு
உருப்பெற்று உயிர் பெற்று கணபதியானாய்
உலகின் அதிபதியானாய்
நீயோ தாய் காத்த தனயன் உன்
தலை கொய்த பரமன் கஜராஜன் தலைவைத்த
கஜபதியானாய் உலகின் அதிபதியானாய்
உனை நாடும் பக்தர்க்கு உன் கர்ப்பகிரஹம்
உள்ளே அமர்ந்துள்ள நீயே சொர்க்கம்
எப்பூஜைக்கும் நீ அகரம் உனக்குத் தோப்புக்கரணம்
நான் போட நல் வாழ்வு அருளனும்
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே…
வானாக மண்ணாக நீராக காற்றாக
நெருப்பாக உருவான கணநாயக -பஞ்சமுக நாயக
நீ என் ஊனாக உணர்வாக உடலாக உயிராக
உறவோடு உறவான குணதாயக – பிரணவ அருள்நாயக
பிறப்பே இல்லானே எடுத்துக்கொள்ளு
இப்பிறப்பில் தான் முக்தியை கொடுத்தருளு
உன் தும்பிக்கை என் அபயம்
என் வாழ்க்கை உன் உபயம்
நான் உன்னை பாட பக்தி உதயம்
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!
– சரணம் ஐயப்பா –