உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள்
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா !!
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா !!! நான்
உன்னையும் மறப்பதுண்டோ ?
கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா !!!
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன் !
நான் உன்னையும் மறப்பதுண்டோ !
பொன் பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா !
என்னுயிர் ஆன உன்னை
என்னுயிர் ஆன உன்னை
மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன் ?
நான் உன்னையும் மறப்பதுண்டோ ?
நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன் ?
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ ? முருகா !! நான்
உன்னையும் மறப்பதுண்டோ ?
– சரணம் ஐயப்பா –