சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
சுவையான அமுதே செந்தமிழாலே ….
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
சுவையான அமுதே செந்தமிழாலே …..
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ !
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ !
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் – உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
சுடர்மிகு வடிவேலா !!
– சரணம் ஐயப்பா –