சபரிமலைக்கு மாலை அணியும் முறை!
✔️ கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
✔️ சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
எவ்வாறு மாலை அணிய வேண்டும்?
✔️கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை, அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைபிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.
✔️ சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும்.
✔️ விரதத்தைத் தொடங்குவதற்கு முன், 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்திராட்ச மாலையை, ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.
✔️ குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம்.
✔️ மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
மாலை அணிந்தபின் என்ன செய்ய வேண்டும்?
✔️ மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
✔️ விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம். அதனால் தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது, ஐயப்பன் பாடல்களை பாடலாம்.
✔️ நாள்தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளிலும் நீராடி, பஜனை வழிபாடு செய்ய வேண்டும்.
✔️ ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.
– சரணம் ஐயப்பா –