பழம் மிகுந்த சோலையெல்லாம், பழ
வேதாரண்யமதில்
திருவேற்காடிருக்குமிடம் கொண்டவளாம்
கருமாரி
எங்கள் கருமாரியம்மா, எங்கள் குறை
தீருமம்மா
உந்தன் மலர் பாதமதை நம்பி வந்தோம்
மாரியம்மா
பழம் மிகுந்த…
ஆயிரம் கண் கொண்டவளாம்,
ஆயி மஹாமாரியவள்
ஆங்காரம் கொண்டவளாம் எங்கள்
கருமாரியவள்
எங்கள் கருமாரியம்மா, எங்கள் குறை
தீருமம்மா
உந்தன் மலர் பாதமதை நம்பி வந்தோம்
மாரியம்மா
பழம் மிகுந்த…
வேற்காட்டூ கருமாரி சமயபுர மாரியம்மா
உலகாளும் அபிராமி எங்கள் தில்லை
காளியம்மா
பழம் மிகுந்த…
கடைக்கண்ணால் காத்திடுவாய் கொல்லூர்
மூகாம்பிகையே
அன்னை உந்தன் சன்னதியில்
என்றென்றும் கூடிடுவோம்
பழம் மிகுந்த சோலையெல்லாம், பழ
வேதாரண்யமதில்
திருவேற்காடிருக்குமிடம் கொண்டவளாம்
கருமாரி
– சரணம் ஐயப்பா –