பாசி படர்ந்த மலை, பங்குனித்தேர் ஓடும்
மலை
ஊசி படர்ந்த மலை, ருத்திராக்ஷம்
காய்க்கும் மலை
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
மலைக்கும் மலை நடுவே, மலையாள
தேசமெல்லாம்
(அவர்) அடக்கி சிறையெடுப்பார் ஆறுமுக
வேலவனே
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
உச்சியில் சடையிருக்க, உள்ளங்கையில்
வேலுருக்க
நெற்றியில் நீர் இருக்கும் நீராட வாரீரோ
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
ஏறாத மயில் ஏறி இறகு ரெண்டும்
தத்தளிக்க
பாராமல் தை பூசம் ஆறுமுக வேலவனே
பாராமல் தை பூசம் பழனிமலை
வேலவனே
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
ஆற்காட்டு சீமையிலே ஆறு லக்ஷம்
காவடிகள்
தேர்க்காட்டு சீமையிலே தேசமெல்லாம்
காவடிகள்
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
முத்து குடை பிடித்து மிளகு சம்பா நார் ஓ
பாவி
பட்டு குடை பிடித்து பகல் வேட்டை
வாரீரோ
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
அரகரோஹரா முருகா, அரகரோஹரா
வேல் வேல் முருகா…வெற்றி வேல்
முருகா
– சரணம் ஐயப்பா –