பரமன் கொழுந்தே விநாயகா
பிரணவப் பொருளே விநாயகா
ஒற்றைக் கொம்பனே விநாயகா
விக்ன ராஜனே விநாயகா
மங்கள மூர்த்தியே விநாயகா
லம்போதரனே விநாயகா
என்வினை களைவாய் விநாயகா
உறுதுணை நீயே விநாயகா
ஊக்கம் தருபவா விநாயகா
கஜமுக தேவா விநாயகா
ஜகதோத்தாரா விநாயகா
குவலயம் போற்றும் விநாயகா
நல்லன நாட்டுவாய் விநாயகா
நல்லருள் புரிவாய் விநாயகா
திருமுறை காட்டிய விநாயகா
தியான சித்தியளிக்கும் விநாயகா
அடைக்கலமடைந்ததோம் விநாயகா
அருள் நீ புரிவாய் விநாயகா.
– சரணம் ஐயப்பா –