பழனி ஆண்டவர் பவனி வருகிறார்
தங்கத்தேரினிலே
நவ பாஷாணத்தை உருவமைதாரே,
போகப்பெருமானே
பழனி ஆண்டவர் பவனி வருகிறார்
தங்கத்தேரினிலே
ஒரு கனிக்காய் உலகம் சுற்றிய பழனி
மலைக்கோவில்
சிவக்குழந்தாய் தண்டாயுதம் ஏந்திய
திருக்கோவில்
அழகு மயில் நடமாட அற்புத வேலாட
அன்னைப்பெரிய நாயகியும் அப்பனும்
கூத்தாட
அன்பர்கள் துதி பாட அருணகிரி தமிழ் பாட
ஹர ஹர சிவ சிவ சரவணபவ குஹ
பன்னீரில் அபிஷேகம் வெந்நீரில்
அபிஷேகம்
பன்னீரில் அபிஷேகம் வெந்நீரில்
அபிஷேகம் (ஸு)
பாலோடு சந்தனமும் பஞ்சாம்ருத
அபிஷேகம்
ராஜ அலங்காரம் ஞானியின் அவதாரம்
ஹர ஹர சிவ சிவ சரவண பவ குஹ
பழனி ஆண்டவர் பவனி வருகிறார்
தங்கத்தேரினிலே
– சரணம் ஐயப்பா –