பானை வயிறோனே கணநாதா
பாரதம் எழுதிய கணநாதா
அறிவிற் சிறந்த கணநாதா
ஆதார சக்தியே கணநாதா.
அழகிற் சிறந்த கணநாதா
அகிலலோக குருவே கணநாதா
முழுமுதற் கடவுளே கணநாதா
மூஷிக வாஹனா கணநாதா
அனுகூலம் செய்பவனே கணநாதா
உம்பர் போற்றும் கணநாதா
மண்ணாய் விண்ணாய் கணநாதா
மகரமாய் நின்ற கணநாதா
கண்ணுள் மணியாய் கணநாதா
கற்பக நாயகா கணநாதா
கம்பீர உருவமே கணநாதா
கருணையூற்றே கணநாதா
கோள்வினை தீர்ப்பவனே கணநாதா
ஐயம் தீர்ப்பாய் கணநாதா
சரணம் சரணம் கணநாதா
– சரணம் ஐயப்பா –