ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே ஓடி வா முருகா
ஓடி வாகந்தாநீ ஓடி வா முருகா
உமையவள் நன்மகனே ஓடி வா முருகா
கணபதி சோதரனே ஓடி வா முருகா
கண்கண்ட தெய்வமே நீ ஆடி வா முருகா
ஆறுமுக தேவனாக ஓடி வா முருகா
ஏறுமயில் ஏறி நீ ஆடி வா முருகா
ஓடி வாமுருகா…
தெய்வானை வள்ளியோடு ஓடி வா முருகா
செந்தில் வடிவேலவனே நீ ஆடி வா முருகா
ஆறுமுக தோற்றத்தோடு ஓடி வா முருகா
அரோகரா அரோகரா ஆடி வா முருகா
ஓடி வாமுருகா…
தைமாதம் பிறந்திடவே ஓடி வா முருகா
தரணியில் கொண்டாட்டமாம் ஆடி வா
முருகா
மலை மேலே தேரோட்டமா ஓடி வா முருகா
மலைக்கு கீழே பக்தராட்டம் ஆடி வா முருகா
ஓடி வாமுருகா..
பாலோடு பஞ்சாம்ரிதம் ஓடி வா முருகா
பழனி மேல் ஆண்டியாக ஆடி வா முருகா
தைபூச திருநாளில் ஓடி வா முருகா
தங்கத்தேரு பவனியில் ஆடி வா முருகா
ஓடி வாமுருகா…
அடிவாரம் சுற்றி வந்தோம் ஓடி வா முருகா
ஆண்டி உன்னை காண வந்தோம் ஆடி வா
முருகா
அருளை எல்லாம் தருபவனே ஓடி வா
முருகா
அன்னை சக்தி பாலகனே நீ ஆடி வா
முருகா
ஓடி வாமுருகா…
பன்னீர் அபிஷேகனாக ஓடி வா முருகா
பழனி மலை ஆண்டியாக ஆடி வா முருகா
தண்டபாணி தெய்வமே நீ ஓடி வா முருகா
தங்கரதம் மீது அமர்ந்து ஆடி வா முருகா
ஓடி வாமுருகா…
தண்டபாணி தெய்வமே நீ ஓடி வா முருகா
தங்கரதம் மீது அமர்ந்து ஆடி வா முருகா
தொண்டர்களை காத்திடவே ஓடி வா
கொண்டாடும் உள்ளங்களில் ஆடி வா
முருகா
ஓடி வாமுருகா…
கூட்டமாக குரல் கொடுப்போம் ஓடி வா
முருகா
ஆட்டம் ஆடி வாட்டம் நீக்க ஆடி வா
முருகா
ஆறுமுக பேரழகா ஓடி வா முருகா
ஆறுதலை தந்திடவே ஆடி வா முருகா
ஓடி வா முருகா நீ ஓடி வாகந்தா
உமையவள் நன்மகனே ஓடி வா முருகா
ஓடிவா கந்தா நீ ஓடி வாமுருகா
உமையவள் நன்மகனே ஓடி வா முருகா
– சரணம் ஐயப்பா –