நமோ நமோ நமோ நமோ ஐங்கரத் தெய்வமே நமோ நமோ
உத்தமிப் புதல்வனே நாமோ நமோ
உம்பர்கள் தலைவனே நமோ நமோ
எண்குணச் செல்வனே நமோ நமோ
எங்குமுன் திருவருள் நமோ நமோ.
(நமோ),
குடவயிற்று இறைவனே நமோ நமோ
குட்டில் மகிழ்பவனே நமோ நமோ
சகல லோகாதி ஈசனே நமோ நமோ
சுத்த பரிபூரணனே நமோ நமோ.
(நமோ),
துதிக்கைச் செம்மலே நமோ நமோ
புவன காரணனே நமோ நமோ
பசுபாச விமோசகனே நமோ நமோ
பிரணவத்தின் உட்பொருளே நமோ நமோ.
(நமோ),
நமோ நமோ நமோ நமோ சதுர்த்தி நாயகனே நமோ நமோ
– சரணம் ஐயப்பா –