முருகா முருகா ஓடி வா
முக்கண் மைந்தனே ஆடி வா
ஆடும் மயிலும் பீலியும்
ஆனந்தமாக வள்ளியும்
ஆனந்த-தாண்டவமுடனே நீ
வருவாயே மயில் மீதிலே
முருகா முருகா ஓடி வா
முக்கண் மைந்தனே ஆடி வா
பழனி மலை வாழும் பாலனே
பக்தர்கள் போற்றும் தேவனே
உத்தம வள்ளி சமேதராய்
உல்லாசமாகவே ஓடி வா
முருகா முருகா ஓடி வா
முக்கண் மைந்தனே ஆடி வா
– சரணம் ஐயப்பா –