முந்தி செய்த வினை, அந்தமும் தீர
தொந்தி பெருத்தானின் துணையை நாடினேன்
பந்தம் தவிர்த்து பாவி என்னைக் காத்திட
பாதார விந்தமதைப் பற்றினேன்
வேழ முகத்தோனே, விநாயகப் பெருமானே,
விக்ன விநாயகா போற்றி
வேத மூலமே போற்றி போற்றி
சங்கடஹரனே போற்றி போற்றி
சதுர்முக நாயகா போற்றி போற்றி
பஞ்ச கரனே போற்றி போற்றி
துஞ்சிடும் துயர் தீர்ப்பவனே போற்றி போற்றி
தும்பிக்கையானே போற்றி போற்றி
தூய கரிமுகத்தோனே போற்றி போற்றி
ஆய கலைகளின் ஆரம்பமே போற்றி
அருள்முகம் காட்டும் ஐயா போற்றி
அற்புதம் நிகழ்த்தும் பொற்பதம் போற்றி
தற்பரனே, தாரணனே, வாரணமே போற்றி போற்றி.
– சரணம் ஐயப்பா –