மாங்காட்டூ காமாட்சி மாமதுரை
மீனாட்சி
வேற்காட்டூ கருமாரி சமயபுர மகமாயி
எத்தனை ஊரம்மா எத்தனை பேரம்மா
அத்தனை உயிர்களையும் காத்தருளும்
தேவி அம்மா
மாங்காட்டு…
ஆயிரம் கண்ணுடையாள் ஆயிரம்
பெயருடையாள்
சரணமென்று வந்தாலே அபயவரம்
தந்திடுவாய்
மாங்காட்டு…
மங்கையர் மனம் போல் மாங்கல்ய
வாழ்வளிப்பாள்
மங்களமாய் கொலுவிருக்கும்
மாங்காட்டூ காமாக்ஷி
மாங்காட்டு…
உலகமெனும் கடலினிலே துடுப்பில்லா
படகினை போல
துன்ப நிலை சேர்க்காதே தூயவளே
கருமாரி
மாங்காட்டு…
சோதனை போதுமம்மா வேதனை
தீருமம்மா
சிவசக்தி நாயகியே சிங்கார கருமாரி
மாங்காட்டு காமாட்சி மாமதுரை
மீனாட்சி
வேற்காட்டூ கருமாரி சமயபுர மகமாயி
– சரணம் ஐயப்பா –