கற்பகமூர்த்தி ஐயா கற்பகமூர்த்தி எங்கள்
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தி.
அற்புதமாய் வீற்றிருக்கும் கற்பகமூர்த்தி உன்னை
அனுதினமும் தொழுதிடுவோம் கற்பகமூர்த்தி.
செந்திலுக்கு மூத்தவனே கற்பகமூர்த்தி
அந்த சிவபெருமான் பெற்றவனே கற்பகமூர்த்தி
வந்தவர்கள் அனைவருக்கும் கற்பகமூர்த்தி
நல்ல வரம் கொடுப்பாய் நலம் கொடுப்பாய் கற்பகமூர்த்தி.
ஆனை வடிவானவனே கற்பகமூர்த்தி
நல்ல அருகம்புல் ஏற்பவனே கற்பகமூர்த்தி
பானை வயிறானவனே கற்பகமூர்த்தி
அந்த பராசக்தி திருமகனே கற்பகமூர்த்தி.
சந்தனத்தில் மனம் கமழும் கற்பகமூர்த்தி
நல்ல சதுர்த்தியிலே வரம் கொடுப்பாய் கற்பகமூர்த்தி
மந்திரத்தில் ஓம் வடிவம் கற்பகமூர்த்தி ட
உன்னை மறவாமல் போற்றிடுவோம் கற்பகமூர்த்தி.
மூஷிகத்தில் ஏறிவரும் கற்பகமூர்த்தி நீயும்
மோதகத்தில் பிரியம் வைத்தாய் கற்பகமூர்த்தி
ஆசையுடன் உனைத் தொழுதோம் கற்பகமூர்த்தி
நீயும் அருள்தருவாய் பொருள்தருவாய் கற்பகமூர்த்தி
கற்பகமூர்த்தி ஐயா கற்பகமூர்த்தி
(கற்பகமூர்த்தி),
– சரணம் ஐயப்பா –