கந்தனுக்கு சொந்தம் என்று ஆடும் மயிலே
கண்குளிர நின்று விளையாடூ மயிலே
ஆண்டவனை கண்டேன் என்று சொல்லு
மயிலே
ஆனந்த களிப்புடன் ஆடும் மயிலே
பழனி மலை ஆண்டவனை காட்டூ மயிலே
பாத மலர் என்-மடிமேல் சூடூ மயிலே
மண்டபத்தில் ஏறி விளையாடும் மயிலே
வந்த வினை தீரும் என்று சொல்லு மயிலே
ஆடூ மயிலே, நடனம் ஆடூ மயிலே
கூவி கூவி நின்று விளையாடூ மயிலே
பக்தி நிலை நிற்க வந்து ஆடூ மயிலே
முருகனோடு இங்கு வந்து ஆடூ மயிலே
கந்தனுக்கு சொந்தம் என்று ஆடும் மயிலே
கண்குளிர நின்று விளையாடூ மயிலே
ஆடூ மயிலே…விளையாடூ மயிலே.
– சரணம் ஐயப்பா –