ஜலஜலவென சலங்கை குலுங்க
கலகலவென சிரித்து கொண்டு
பல பல பல லீலை புரிந்து பவனி
வருகிறாள், அம்மா பவனி வருகிறாள்
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
அகிலத்தை அரவணைக்க பவனி வருகிறாள்
அம்மா பவனி வருகிறாள்
காளி…மஹாகாளி, தேவி…பராசக்தி
அர்த்தமில்லா வார்த்தைகளை
அர்த்தமுள்ளதாக்கிவிட்டு
அர்த்தமில்லா சிறு வாழ்வில் அன்பதனை
தந்தருளி
அர்த்தமுடனே வாழ வைப்பாள் அன்பு நாயகி
அகிலலோக ரட்சகியே ஜெகதீஸ்வரி
ஜலஜலவென சலங்கை குலுங்க
கலகலவென சிரித்து கொண்டு
பல பல பல லீலை புரிந்து பவனி
வருகிறாள், அம்மா பவனி வருகிறாள்
காளி…மஹாகாளி, தேவி…பராசக்தி
தேகமேகம் சூழ்ந்தாலும்
ஆத்ம சூலம் ஒளிவீசும்
ஏக சக்தி கதிரவனாம் பராசக்தியே
கதிரவனை திலகமாக்கி தரித்து
கொண்டவளே
காதணியை வெண்ணிலவாய்
மாற்றிவிட்டவளே
ஜலஜலவென சலங்கை குலுங்க
கலகலவென சிரித்து கொண்டு
பல பல பல லீலை புரிந்து பவனி
வருகிறாள், அம்மா பவனி வருகிறாள்
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
அகிலத்தை அரவணைக்க பவனி வருகிறாள்
அம்மா பவனி வருகிறாள்
மனமென்னமோ மலர்கிறது, பேரின்பத்தை
பெருகிறது மனக்கோவில் நிறைந்திடவே
தேவி வருகிறாள்
கலியுகத்தில் குறை மறைய அருள்
வேண்டுமே
கலிதோஷம் நீக்க ஞான மழை வேண்டூமே
– சரணம் ஐயப்பா –