கோபுரத்து உச்சியிலே என் குரலும்
கேட்கலையோ
கோவிலின் சன்னதியில் என் குரலும்
கேட்கலையோ
ஆலயமணி ஓசையிலே என் குரலும்
கேட்கலையோ
அன்பர்களின் கோஷத்திலே என் குரலும்
கேட்கலையோ
வேல் முருகா…வேல் முருகா… வேல் முருகா
வடிவேல் முருகா(2)
சேவல் கூவும் ஓசையிலே என் குரலும்
கேட்கலையோ
ஆவல் கொண்டு கூப்பிடுவேன் என் குரலும்
கேட்கலையோ
உன்னை… ஆவல் கொண்டு கூப்பிடுவேன் என்
குரலும் கேட்கலையோ
காத்திருக்கும் சத்தத்திலே என் குரலும்
கேட்கலையோ… பக்தர்
காத்திருக்கும் சத்தத்திலே என் குரலும்
கேட்கலையோ
கந்தா உன் காலடியில் எனக்கு மட்டும் இடம்
இல்லையோ
அடி எடுத்து வைப்பதற்கோ ஆவதில்லை
என்னாலே
ஓடி வந்து காப்பதற்கோ முடியவில்லை
உன்னாலே
அன்பாலே கோவிலிலே எல்லாம் உன்
நிலையாலே
எல்லாரும் எந்நாளும் சொல்வாரே உன் நாமம்
மயில் ஆடும் ஆழகினிலே மெய் மறந்து
நின்றாயோ
பக்தர் ஆடும் காவடியில் மனம் நெகிழ்ந்து
போனாயோ
பக்தரின் உள்ளத்திலே குடி இருக்க வாராயோ
பகல் இரவாய் உளறுகிறேன் கேட்க உனக்கு
மனம் இல்லையோ
வேல் முருகா…வேல் முருகா… வேல் முருகா
வடிவேல் முருகா(2)
– சரணம் ஐயப்பா –