கணபதியே சுவாமி கணபதியே
காத்தருள வேண்டுமய்யா கணபதியே.
(கணபதியே)
மூல முதற்பொருளே கணபதியே – ஐயா
முக்கண்ணன் தன்மகனே கணபதியே
கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே – ஐயா
காத்தருள வேண்டுமய்யா கணபதியே.
(கணபதியே)
வேல்முருகன் சோதரனே கணபதியே – ஐயா
வினை தீர்த்த வித்தகனே கணபதியே
பார்வதியின் புத்திரனே கணபதியே – நல்ல
பண்பு மனம் கொண்டவனே கணபதியே.
(கணபதியே),
தொந்தி வயிற்றோனே கணபதியே – ஐயா
தொழுதிடவே வந்தோமய்யா கணபதியே
தும்பிமுகம் கொண்டவனே கணபதியே – ஐயா
துணையாக வர வேண்டும் கணபதியே.
(கணபதியே)
மூஷிக வாகனனே கணபதியே – ஐயா
முன்நின்று காக்க வேண்டும் கணபதியே
பாசமுடன் ஓடிவந்து கணபதியே – எங்களைப்
பாதுகாக்க வேண்டுமய்யா கணபதியே.
(கணபதியே)
– சரணம் ஐயப்பா –