கணநாதா கணநாதா கணநாயகா கணநாதா
கணநாதா கணநாதா கலியுகநாதா கணநாதா.
(கணநாத
கரணத்தில் மகிழும் கணநாதா கருணாகரனே கணநாதா
கூவிட வருவோய் கணநாதா கூத்தன் மகனே கணநாதா
சுந்தரவடிவே கணநாதா சுருதிப் பொருளே கணநாதா
வேழமுகம் கொண்ட கணநாதா வேதங்கள் தொழுதிடும் கணநாதா.
(கணநாத
கவலை தீர்க்கும் கணநாதா காணிப்பாக்கம் கணநாதா
விளையாடி வரும் கணநாதா வினை தீர்க்கும் கணநாதா
பரம நிரஞ்சன கணநாதா பாரதம் எழுதிய கணநாதா
ப்ரதம பூஜித கணநாதா ப்ரதம ப்ரார்த்தன கணநாதா.
(கணநாத,
சரணம்…