சின்ன சின்ன முருகா முருகா
சிங்கார முருகா!
சிந்தையிலே வந்து ஆடும்
சீரலைவாய் முருகா முருகா!
எண்ணமதில் திண்ணமதாய்
எப்போதும் வருவாய் அப்பா!
ஏற்றி உன்னை பாடுகின்றேன்
ஏரகத்து முருகா முருகா!
அப்பனுக்கு உபதேசித்த
அருமை குருநாதனுமாய்
சுவாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமிநாத குருவே அப்பா!
பாலும் தேன் அபிஷேகமும்
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரங்கிரி தேவனாகி
அகங்காரமும் ஆத்திரமும்
அகந்தைகளை விட்டு விட்டு
அடைக்கலமாய் ஓடி வந்தேன்
ஆறுமுக வேலவனே!
முக்திக்கு வழிதேடிய
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் பால் மருகனே வாவா!
– சரணம் ஐயப்பா –