சின்ன சின்ன காவடியாம்
சிங்கார காவடியாம்
வண்ண வண்ண காவடியாம்
வடிவேலன் காவடியாம்
காவடியாம் காவடி கந்த வேலன் காவடி
கண்கொள்ளா காட்சி தரும் கந்தனுக்கு
காவடி
கந்தனுக்கு அரோஹரா
முருகனுக்கு அரோஹரா
வேலனுக்கு அரோஹரா
வடிவேலனுக்கு அரோஹரா
பழனி மலை முருகனுக்கு பால் பழத்தால்
காவடி
மருதமலை முருகனுக்கு மச்சத்தால்
காவடி
திருத்தணிகை முருகனுக்கு திருநீரால்
காவடி
திருசெந்தூர் முருகனுக்கு சந்தனத்தால்
காவடி
காவடியாம் காவடி…
கடம்பனுக்கு அரோஹரா
குமரனுக்கு அரோஹரா
நேயனுக்கு அரோஹரா
கார்த்திகேயனுக்கு அரோஹரா
திருப்பரங்கிரி முருகனுக்கு திருநீரால்
காவடி
ஸ்வாமிமலை முருகனுக்கு பன்னீரால்
காவடி
செங்கோட்டை வேலனுக்கு
செங்கரும்பால் காவடி
குன்றக்குடி வேலனுக்கு பாலாலே காவடி
காவடியாம் காவடி…
அப்பனுக்கு அரோஹரா
சுப்பனுக்கு அரோஹரா
ஆண்டிக்கு அரோஹரா
பழனி ஆண்டிக்கு அரோஹரா
சென்னிமலை முருகனுக்கு செந்தூர
காவடி
வடபழனி முருகனுக்கு வண்ண வண்ண
காவடி
காவடியாம் காவடி…
வீரனுக்கு அரோஹரா
சூரனுக்கு அரோஹரா
நாதனுக்கு அரோஹரா
செந்தில்நாதனுக்கு அரோஹரா
காவடியாம் காவடி…
– சரணம் ஐயப்பா –