அருள்மிகு ஐயப்பன் 108 சரணக் கோவை
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
ஓம் மாதா பிதா குரு தெய்வங்களே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா
ஓம் அரிகர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் அகிலமெல்லாம் காப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் அம்பலத் தரசே சரணம் ஐயப்பா.
ஓம் அகந்தையை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஆசைகள் அடக்கி ஆள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் இச்சையெல்லாம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இருளகற்றிய ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இன்னல்கள் நீக்குபவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் உண்மையின் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் எல்லாம் வல்லவனே சரணம் ஐயப்பா
ஓம் என் குல தெய்வமேசரணம் ஐயப்பா
ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஏற்றமெல்லாம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரனின் தம்பியேசரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா
ஓம் ஐந்து மலைக்கதிபதியே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லா திருமேணியே சரணம் ஐயப்பா
ஓம் ஓம்ஹார பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந்தொடே சரணம் ஐயப்பா
ஓம் கருணை கடலேசரணம் ஐயப்பா
ஓம் கரிமலை வாசனே சரணம் ஐயப்பா
ஓம்கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடுங்குன்றே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடு வந்தனமேசரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரத்னே சரணம் ஐயப்பா
ஓம் கண் கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் காளை கட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
ஓம் காருண்ய மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனேசரணம் ஐயப்பா
ஓம் குளத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா.
ஓம் குருவாயூர்ப்பன் மைந்தனே சரணம் ஐயப்பா
ஓம் சரணகோஷ பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம் ஐயப்பா
ஓம் சத்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கருள் செய்தவனே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் சங்கடங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனேசரணம் ஐயப்பா
ஓம் சாந்த ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனேசரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனேசரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பந்தளத்து ராஜனேசரணம் ஐயப்பா
ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
ஓம் பதினேட்டாம் படிகளே சரணம் ஐயப்பா
ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா
ஓம் பக்தர்களை காப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பாவ விமோஷகனே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த் தோடே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா
ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் துளசி மணிமார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராஜா பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் நித்திய பிரமச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் நெய்யபிஷேகப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நெஞ்சம் குளிர வைப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் மணிகண்ட பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்ச மாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீர மணிகண்டனே சரணம் ஐயப்பா
சுவாமியேசரணம் ஐயப்பா
சுவாமியேசரணம் ஐயப்பா
சுவாமியேசரணம் ஐயப்பா
அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும்
ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும்
வில்லாளி வீரன், வீர மணிகண்டன், காசி, ராமேஸ்வரம்,
பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், ஓம் ஹரிஹர சுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா
– சரணம் ஐயப்பா –