அருகம்புல்லுக்கும் பெருமை
அருகம்புல்லுக்கும் பெருமை தந்தது யாரு? யாரு?
இந்த உலகம் முழுக்க அருளைக் கொடுக்கும் பிள்ளையாரு
அந்த பிள்ளையார் கோவில் கொண்ட ஊரு
இங்கே வந்து பாரு என்ன வேணும் கேளு
ஐந்து முக பிள்ளையாரு அவர் அற்புதம் செய்யிறாரு.
(அருகம்புல்,
வெள்ளெருக்கு செவ்வரளி பூவைக் கூட
மாலையாய் போட்டுக் கொள்ளும் பிள்ளையாரு
மல்லிகை முல்லை போல நம்ம வாழ்வு
வாசனை உள்ளதாக ஆக்குவாரு.
(ஐந்த),
மோதகப் பிரியரான பிள்ளையாரு
மோதகம் போல் இனிப்பைத் தருவாரு
ஆதிமுதல் பொருளான பிள்ளையாரு
வேதனையை மாற்றி நம்மைக் காப்பாரு.
(ஐந்த),
முத்துமணி சொல்லெடுத்து மாலையாக
முக்கனியின் சுவையெடுத்து உன்னை நானே
அனுதினமும் பாடிடுவோம் ஆனைமுகத்தானே
ஆண்டருள்வாய் விநாயகப் பெருமானே.
(ஜந்து),
– சரணம் ஐயப்பா –