அன்பர்க்கு அன்பன் அல்லவா, என் அப்பனே
ஆறுமுக தெய்வம் அல்லவா
இன்பம் அளிப்போன் அல்லவா, என்
அப்பனே நீ
ஈடில்லா தெய்வம் அல்லவா
உமையவள் மைந்தன் அல்லவா என்
அப்பனே நீ
ஊனம் ஒழிப்பாய் அல்லவா
என் வினை தீர்ப்பாய் அல்லவா, என்
அப்பனே நீ
ஏற்றம் அளிப்போன் அல்லவா
ஐங்கரன் தம்பி அல்லவா, என் அப்பனே நீ
ஐயம் தீர்ப்பாய் அல்லவா
ஒரு பெரு தெய்வம் அல்லவா, என் அப்பனே
ஓம்கார மூர்த்தி அல்லவா
கண் கண்ட தெய்வம் அல்லவா, என்
அப்பனே நீ
காமாட்சி மைந்தன் அல்லவா
சதகுரு நாதன் அல்லவா, என் அப்பனே நீ
சடாட்சர மூர்த்தி அல்லவா
அன்பர்க்கு அன்பன் அல்லவா, என் அப்பனே
ஆறுமுக தெய்வம் அல்லவா
– சரணம் ஐயப்பா –