அன்பனுக்கு அன்பனே நீ வாவா
ஷண்முகா
ஆறுபடை வீடூடையாய் வா வா
ஷண்முகா
இன்பமய ஜோதியே நீ வா வா ஷண்முகா
ஈசன் உமை பாலகனே வா வா ஷண்முகா
ஆடி வா ஷண்முகா ஓடி வா ஷண்முகா
உலக நாத மருமகனே வா வா ஷண்முகா
ஊமைக்கருள் புரிந்திடுவாய் வா வா
ஷண்முகா
எட்டு குடி வேலவனே வா வா ஷண்முகா
ஏறு மயில் ஏறி ஏறி வா வா ஷண்முகா
ஆடி வா ஷண்முகா ஓடி வா ஷண்முகா
ஐங்கரன் நிலையவனே வா வா ஷண்முகா
ஓய்யார வள்ளி லோலா வா வாவா
ஓம்கார தத்துவமே வா வா ஷண்முகா
அவ்வைக்கே உபதேசம் செய்தவா
ஷண்முகா
ஆடி வா ஷண்முகா ஓடி வா ஷண்முகா
– சரணம் ஐயப்பா –