அம்மா வருகிறாள் அரியேரி வருகிறாள்
அம்மா வருகிறாள் அரியேரி வருகிறாள்
அகிலம் ஆளும் ருத்திரரும் கூட வருகிறார்
ஆதிசக்தியான கருமாரி வருகிறாள் (2)
ஆயிரம் கண்ணுடைய கருமாரி வருகிறாள்
துன்பமய புற்றமையில் ஆடி வருகிறாள்
இன்னலை அகற்றிடவே அவள் ஓடி வருகிறாள்
ஈசனுடைய தேவி கருமாரி வருகிறாள்
ஈகை தயை கொண்ட கருமாரி வருகிறாள்
அம்மா வருகிறாள்…
மூவருக்கு உவப்பளித்த தேவி வருகிறாள்
உண்மையை உயர்த்தவே அவள் ஓடி
வருகிறாள்
ஊரமர்ந்த வேற்காட்டூ கன்னி வருகிறாள்
ஊழி காலம் காத்த கருமாரி வருகிறாள்
அம்மா வருகிறாள்…
எம்பெருமான் தங்கை அவள் ஆடி வருகிறாள்
எழுவனிலே இளைய நங்கை தேடி
வருகிறாள்
ஏகாக்ஷர பொருளான அம்மை வருகிறாள்
ஏழைகளை காக்கவே அவள் இங்கே
வருகிறாள்
அம்மா வருகிறாள்…
ஆடி வருகிறாள் அவள் ஓடி வருகிறாள்
கவியவிழ் பொருளான கருமாரி வருகிறாள்
இகத்தனைத்தும் கொண்ட கருமாரி
வருகிறாள்
ஆடி வருகிறாள் அவள் ஓடி வருகிறாள்
அம்மா வருகிறாள்…
ஓம்காரரூபியான சக்தி வருகிறாள்
ஓம் சக்தியான கருமாரி வருகிறாள்
கெளபாஷண வடிவு கொண்ட மாரி
வருகிறாள்
கவியவிழ் பொருளான கருமாரி வருகிறாள்
அம்மா வருகிறாள்…
– சரணம் ஐயப்பா –