அச்சனுக்கு மலை உண்டு கைலாசம்
அம்மைக்கொரு மலை உண்டு ஏழுமலை
சேட்டனுக்கு மலை உண்டூ பழனி மலை
எங்கள் ஐயப்பனின் மலை உண்டூ சபரிமலை
சரணம் சரணம் சரணம் அப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் அப்பா
வரணும் வரணும் வரணுமப்பா
எங்கள் ஸ்வாமியே சரணம் சரணம் அப்பா
அச்சனோட மந்திரம் நமச்சிவாயம்
அம்மையோட மந்திரம் நாராயணா
சேட்டனோட மந்திரம் அரோஹரா
எங்கள் ஐயப்பனின் மந்திரம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் அப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் அப்பா
வரணும் வரணும் வரணுமப்பா
எங்கள் ஸ்வாமியே சரணம் சரணம் அப்பா
அச்சனோட வாஹனம் ரிஷப வாஹனம்
அம்மையோட வாஹனம் கருட வாஹனம்
சேட்டனோட வாஹனம் மயில் வாஹனம்
எங்கள் ஐயப்பனின் வாஹனம் புலி
வாஹனம்
அச்சனோட ஆட்டம் ருத்ர தாண்டவம்
அம்மையோட ஆட்டம் மோஹினி ஆட்டம்
சேட்டனோட ஆட்டம் காவடி ஆட்டம்
எங்கள் ஐயப்பனின் ஆட்டம் பேட்டை
துள்ளல்
சரணம் சரணம் சரணம் அப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் அப்பா
வரணும் வரணும் வரணுமப்பா
எங்கள் ஸ்வாமியே சரணம் சரணம் அப்பா
அச்சனோட ராத்திரி சிவ ராத்திரி
அம்மையோட ராத்திரி நவராத்திரி
சேட்டனோட ராத்திரி தைப்பூசம்
எங்கள் ஐயப்பனின் ராத்திரி மகர விளக்கு
– சரணம் ஐயப்பா –