ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள் ஆடூது
திரு ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
காவலனின் பாதத்திலே காவேரியார் ஓடுது
தமிழ் காவலனின் பாதத்திலே காவேரியார் ஓடுது
தங்க நிற பழனியிலே பங்குனித்தேர் ஓடுது
பொங்கி வரும் அன்பர் கூட்டம் தங்க கடல் ஆனது
சித்தர்களும் வாழ்ந்திருக்கும் சக்தி கொண்ட பழனி
உத்திரத்தில் முருகன் வந்தான் பத்து மாச பவனி
ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
திரு ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
சஞ்சீவி தோன்றதினால் சக்தி எல்லாம்
கூடுது
சாத்தும் பனி சந்தனத்தால் சர்வ பிணி
ஓடுது
கந்தனையே சிந்தனை செய் நன்மை எல்லாம் கூடும்
ஆறு படை வீடு சென்றால் கந்தனருள் சேரும்
ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
திரு ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள்
ஆடுது
– சரணம் ஐயப்பா –