ஆண்டருள் செய்வாய் அம்பிகையே
என்னை ஆண்டருள் செய்வாய் அம்பிகையே
அம்மா சோட்டானிக்கரை பகவதியே
அம்மா சோட்டானிக்கரை பகவதியே
என்னை ஆண்டருள் செய்வாய் அம்பிகையே
அம்மே நாராயணா தேவி நாராயணி
ஜகதம்பே நாராயணா தேவி நாராயணி
என்னை ஆண்டருள் செய்வாய் அம்பிகையே
தாண்டவம் செய்திடும் சங்கரன் போற்றிட
சங்கரியே மூகாம்பிகையே
அம்மா சங்கரியே மூகாம்பிகையே
அம்மே நாராயணா…
கால வினாசினி காளியும் நீயே
துஷ்ட வினாசினி துர்கையும் நீயே
மலைமகளாம் உன்னை அலைமகள்
போற்றிட
கலைமகள் குவித்திடும் காட்சியை
அருள்வாய்
அம்மே நாராயணா தேவி நாராயணி
என்னை ஆண்டருள் செய்வாய் அம்பிகையே
அம்பிகையே
ஈஸ்வரியே
பகவதியே
அம்பிகையே
ஈஸ்வரியே
பகவதியே
– சரணம் ஐயப்பா –