என் குறை தீர்ப்பாய் நாயகா
என்இடர் தீர்ப்பாய் விநாயகா
கண் எனக் காப்பாய் நாயகா
கனிவுடன் பார்ப்பாய் விநாயகா
கலியுக நாயகனே நாயகா
காத்திடுவாய் பக்தர்களை விநாயகா
கண நாயகனே நாயகா
கல்வியை அருள்வாய் விநாயகா
குறை தீர்ப்பாய் நாயகா
குகன் சோதரனே விநாயகா
துணையாய் நின்றவனே நாயகா
துன்பத்தை மாற்றுபவனே விநாயகா
பார் புகழும் நாயகா
பாரதம் எழுதியவனே விநாயகா.
-சரணம்–