அருகினில் மகிழ்பவன் அருள் தருவான்
ஆனை முகத்தோன் அருள் தருவான்
இன்னல்கள் நீக்குபவன் அருள் தருவான்.
ஈடு இணையற்றவன் அருள் தருவான்
உலக நாயகன் அருள் தருவான்
ஊக்கம் அருள்பவன் அருள் தருவான்
எருக்கு அணிந்தவன் அருள் தருவான்
ஏற்றம் அளிப்பவன் அருள் தருவான்
ஐங்கர ஐயன் அருள் தருவான்
ஒப்பற்ற விக்னேஸ்வரன் அருள் தருவான்
ஒளஷத பாலகன் அருள் தருவான்
அஃதே – அதுவே – அரசமரத்தடி ஆனை முகத்தோன் அருள் தருவான்.
– சரணம் ஐயப்பா –