பம்பையில் இருமுடி கட்டும் வழக்கம் சரியானதா? தவறானதா?
✔️ சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தால் உங்களுடைய கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை செழிப்பாக இருக்கும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் இருமுடி கட்டும் வழக்கம் சரியானதா? தவறானதா? எனப் பார்ப்போம்.
✔️ பகவானின் ஆணைப்படி, கட்டுநிரை என்பது எங்கிருந்து கிளம்புகின்றோமோ, அங்கிருந்தே கட்டப்பட வேண்டும். முற்காலத்தில், பக்தர்கள் தத்தம் வீடுகளிலேயே கட்டுநிரையை கட்டிக் கொண்டு, பிறகு ஒரு பொது இடத்தில் கூடி, அங்கிருந்து யாத்திரைக்கு கிளம்பினார்கள். ஆனால், தற்காலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒருவரது இல்லத்திலிருந்தோ, மண்டபத்திலிருந்தோ அல்லது கோவிலிருந்தோ கட்டுநிரை கட்டிக்கொண்டு தங்களது யாத்திரையைத் தொடங்குகின்றனர். இது தவறில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
✔️ ஒரு முறை கட்டுநிரையை கட்டிய பிறகு, பக்தர்கள் தங்களது வீட்டுக்குச் செல்லக்கூடாது. சாஸ்திரங்களின்படி, பெரிய பாதையின் (எரிமேலி) வழியாக செல்வது மட்டுமே சபரிமலை யாத்திரையாக கருதப்படுகிறது.
✔️ பம்பை வழி, மற்ற வழிகள் எல்லாம் பிற்காலத்தில் தோன்றியவையே. தலையில் இருமுடி இல்லாமல் எரிமேலிக்குள் நுழையும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. எனவே, எரிமேலிக்குள் செல்லும்முன் கட்டுநிரையானது கட்டியிருக்க வேண்டும். பம்பையிலோ, மற்ற இடங்களிலோ கட்டுநிரை கட்டுவது என்பது ஒருவரது வசதிக்காக கட்டப்படுவதாகும். ஆகவே பம்பைக்கு செல்வதற்கு முன்பே இருமுடி கண்டிப்பாக கட்டியிருக்க வேண்டும்.
– சரணம் ஐயப்பா –