சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே
அன்பே சிவமே கணபதியே
அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
இன்பச் சோதியே கணபதியே
கண்ணே மணியே கணபதியே
கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
பொருளும் தருவாய் கணபதியே
ஆவனித் திங்கள் கணபதியே
அடியேன் தொழுதேன் கணபதியே
கண்கண்ட தெய்வமே கணபதியே
காத்தருள வேண்டும் கணபதியே
சேவடிப் பணிந்தேன் கணபதியே
செல்வம் தருவாய் கணபதியே.
– சரணம் ஐயப்பா –