ஆனந்தம் பரமானந்தம் ஐயப்ப தரிசனம்
ஆனந்தம்
ஹரிஹரசுதனின் மகரவிளக்கே ஐயப்பன்
மாருக்கு ஆனந்தம்.
ஆனந்தம் பரமானந்தம்…
குருவடிவாகி நமக்கென்றும் திருவடி தந்திடும்
ஜயப்பன்
அருள்வடிவாகி சபரியிலே அமர்ந்திடும்
குழந்தை தெய்வமவன்
ஆனந்தம் பரமானந்தம்…
குருவை நாடி மாலைதடி விரதமிருப்போம்
தரணியிலே
விருப்பமுடன் நாம் சென்றுவந்தால் –
நல்ல திருப்பமுண்டு வாழ்க்கையிலே
(நிதானமாக) நல்ல திருப்பம் உண்டு
வாழ்க்கையிலே
ஆனந்தம் பரமானந்தம்…
சந்தனம் நீரும் அப்பனுக்கு, மஞ்சள் குங்குமம்
அம்மனுக்கு
பாலபிஷேகம் கணபதிக்கு
நெய்யபிஷேகம் ஐயனுக்கு
ஆனந்தம் பரமானந்தம் ஐயப்ப தரிசனம்
ஆனந்தம்
ஹரிஹரசுதனின் மகரவிளக்கே ஐயப்பன்
மாருக்கு ஆனந்தம்.
– சரணம் ஐயப்பா –