ஆரங்கள் சூடிடுவோம்
அலங்காரங்கள் செய்திடுவோம்
கீதங்கள் பாடிடுவோம்
பஜன கீதங்கள் பாடிடுவோம்
மறவேனா..மறவேனா..மறவேனா எந்நாளும்
உன்னை
சந்தனம் சாத்திடுவோம்
நெய் அபிஷேகம் செய்திடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம்
பரமானந்தம் கொண்டாடுவோம்
மறவேனோ..மறவேனோ..மறவேனோ
எந்நாளும் உன்னை
கண் கண்ட தெய்வம் அப்பா
எங்கள் கவலைகள் தீர்ப்பாய் அப்பா
உன்னை கண்ணால் கண்டால் போதுமே
ஒருமுறை கண்ணால் கண்டால் போதுமே
மறவேனோ..மறவேனோ..மறவேனோ
எந்நாளும் உன்னை
அய்யா என் குல தெய்வமே
ஐயப்பா என் குல தெய்வமே
சபரீசா என் குறை தீர்ப்பாயே
நாங்கள் உன்னையே நம்பி வந்தோம்
மறவேனோ..மறவேனோ..மறவேனோ
எந்நாளும் உன்னை
சரணம் சரணமே ஐயப்பா
சாஸ்வத ரூப ஐயப்பா
ஸ்வாமியே… ஐயப்போ… ஸ்வாமியே…
ஐயப்போ… ஸ்வாமியே… ஐயப்போ (பலமுறை
சொல்லவும் – முன் பாடகரை தொடர்ந்து)
– சரணம் ஐயப்பா –