தங்கம் அவள் அங்கம் அது தக தகவென
ஜொலிக்குது
தவம் இருந்து பழுத்த பழம் மாங்காட்டில்
ஜொலிக்குது
மங்களமே உருவாக சங்கரி அங்கே
நிற்கிறாள்
மடித்த காலை மாற்றாமல் ஒற்றை காலில்
நிற்கிறாள்
அக்னிதேவன் சுற்றிவர அன்னை நடுவில்
சிரிக்கிறாள்
ஆறுதடவை சென்று வந்தால் ஆறுதலை
அளிக்கிறாள்
தங்கம் அவள் அங்கம் அது தக தகவென
ஜொலிக்குது
தவம் இருந்து பழுத்த பழம் மாங்காட்டில்
ஜொலிக்குது
ஸ்ரீபுரத்தில் லலிதாம்பிகை ஜெபமாலை
உருட்டூவாள்
யோகேஸ்வரி பரமேஸ்வரி தீவினைகளை
அகற்றுவாள்
பாசாங்குசம் கரும்பு தனுசு புஷ்பபாணம்
ஏந்துவாள்
பாலும் பழமும் ஏற்றுக்கொண்டு
பக்தர்களை தாங்குவாள்
தங்கம் அவள் அங்கம் அது தக தகவென
ஜொலிக்குது
தவம் இருந்து பழுத்த பழம் மாங்காட்டில்
ஜொலிக்குது
அம்மா மாங்காட்டில் ஜொலிக்குது
– சரணம் ஐயப்பா –