ஆலயமணி ஓசை கேட்குதம்மா அம்மா
கேட்குதம்மா
ஆண்டவர் குரல் நம்மை அழைக்குதம்மா
அம்மா அழைக்குதம்மா
அருள்மிகு ஜோதி ஒன்று தோன்றுதம்மா
அம்மா தோன்றுதம்மா
அடைக்கலம் வருபோர்க்கு தெரியுதம்மா
அம்மா தெரியுதம்மா
ஓர் ஆறு முகமும் ஈராறு கரமும் மறவாமல்
துணைநின்று காக்குதம்மா
அம்மா காக்குதம்மா
அம்மா உடலாகி உயிராகி உயர் ஞான பழமாகி
உருவாகி ஆட்கொள்ளும் தெய்வம் அம்மா
அம்மா தெய்வம் அம்மா
முத்தான முத்துக்குமரா முருகய்யா வாவா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா
காவி உடுத்தி வந்து காவடி ஆடி வந்தேன்
முத்தான முத்துக்குமரா முருகய்யா வாவா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா
பன்னீரில் குளிக்க வைத்து பட்டாடை உடுத்த
வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து அங்கமெல்லாம்
பூசி வைத்தேன்
நீர் பூசி திலகம் வைத்து நெஞ்சமதில் உன்னை
வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன்
வருவாய் முருகா
முருகா முருகா முருகா முருகா வருவாய்
முருகா மயில் மீதினிலே
வருவாய் முருகா மயில் மீதினிலே வருவாய்
முருகா மயில் மீதினிலே
முத்தான முத்துக்குமரா முருகய்யா வாவா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா
நீ ஆடும் அழகை கண்டு வேல் ஆடி
வருகுதய்யா
வேல் ஆடும் அழகை கண்டூ மயில் ஆடி
வருகுதய்யா
மயில் ஆடும் அழகை கண்டூ மனமாடி
வருகுதய்யா
மனம் ஆடும் அழகை கண்டு மக்கள் கூட்டம்
பெருகுதய்யா
முருகா முருகா முருகா முருகா வருவாய்
முருகா மயில் மீதினிலே
வருவாய் முருகா மயில் மீதினிலே வருவாய்
முருகா மயில் மீதினிலே
– சரணம் ஐயப்பா –