பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்பிரமணியனே வா – இங்கு
இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லை – (பச்சை மயில்) 1
கொச்சை மொழியானாலும் – உன்னைக்
கோஞ்சிக் கோஞ்சிப் பாடிடுவேன் – இங்கு
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா – எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா – (பச்சை மயில்)
வெள்ளமது பள்ளந்தனிலே பாயும்
தன்மை போல உள்ளந்தனிலே – நீ
மள்ள மள்ள புகுந்து விட்டாய் எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா – (பச்சை மயில்)
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அதில்
நேர்மை என்னும் திபம் வைத்தேன் – நீ
செஞ்சிலம்ப கொஞ்சிட வா மருகா
சேவற் கொடி மயில் வீரா – (பச்சை மயில்) 4
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் – மருகா
எங்கும் நீறைந்தவனே – (பச்சை மயில்) 5
அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் – (பச்சை மயில்)
– சரணம் ஐயப்பா –